×

கீழ்வேளூர் அடுத்த திருக்கண்ணங்குடி ஊராட்சியில் உலக கழிவறை தின உறுதிமொழி ஏற்பு

 

கீழ்வேளூர்,டிச.11: நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த திருக்கண்ணங்குடி ஊராட்சியில் உலக கழிவறை தினத்தை முன்னிட்டு திருக்கண்ணங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தனிநபர் கழிவறை தங்கள் இல்லங்களில் பயன்படுத்த வேண்டும். அதேபோல் பள்ளிகளிலும் கழிவறையை பயன்படுத்த வேண்டும் என்ற கழிவறையின் அவசியம் குறித்த விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் செல்வமணி தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்தி வரவேற்றார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகானந்தம் முன்னிலை வைத்தார். திருக்குறுங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கழிப்பறையை பயன்படுத்துவோம் என்ற உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் கீழ்வேளூர் வட்டார ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின், திடக்கழிவு மேலாண்மை நிபுணர் ஆதமநாதன், தகவல் மற்றும் கல்வி தொடர்பு ஆலோசகர் தயாநிதி ஊராட்சி செயலாளர் புகழேந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post கீழ்வேளூர் அடுத்த திருக்கண்ணங்குடி ஊராட்சியில் உலக கழிவறை தின உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : World Toilet Day ,Thirukkanangudi Uradchi ,Kielvellur ,Kielvelur ,Thirukanangudi Union Secondary School ,Nagapattinam District ,Thirukanangudi Uradchi ,
× RELATED உலக கழிவறை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி