×

உலக கழிவறை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவள்ளூர்: சோராஞ்சேரி நடுநிலைப் பள்ளியில் திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார் தலைமையில் உலக கழிவறை தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் தூய்மை பாரத இயக்கம் ஊரகப்பகுதி 2ன் கீழ் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம், சோராஞ்சேரி ஊராட்சியில் உள்ள நடுநிலை பள்ளியில் உலக கழிவறை தினத்தினை முன்னிட்டு மாணவர்களிடைய கழிவறை பயன்பாடு, தன்சுத்தம், கைகழுவும் முறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் எம்.சுகுமார் அனைவரையும் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (வ.ஊ.) க.வெங்கடேசன், (கி.ஊ.) ஆர்.ஞானேஸ்வரி, துணைத் தலைவர் வி.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார் தலைமை தாங்கி உலக கழிவறை தினத்தினை முன்னிட்டு மாணவர்களிடைய கழிவறை பயன்பாடு குறித்தும், தன்சுத்தம் குறித்தும், கைகழுவும் முறைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி பேசினார். பிறகு கழிவறைகள் கட்டுவதற்கான ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினார். இதற்கு முன்னதாக, கழிப்பறையின் அவசியம் குறித்த விழிப்புணர்வு உறுதி மொழியினை திட்ட இயக்குனர் வாசிக்க அனைவரும் ஏற்றுக் கொண்டனர். இதில் ஒன்றிய பொறியாளர் சபிதா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் க.ரீகானா பேகம், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் உமாபதி, தூய்மை பாரத வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் கோ.சிவானந்தம் மற்றும் சுகாதார ஊக்குநர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் தேன்மோழி நன்றி கூறினார்.

The post உலக கழிவறை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Day ,World Toilet Day ,Soranchery Middle School ,Y. Jayakumar ,Dinakaran ,
× RELATED கீழ்வேளூர் அடுத்த திருக்கண்ணங்குடி...