×

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மனைவியை வெட்டிக் கொன்று கணவன் தற்கொலை..!!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மனைவியை வெட்டிக் கொன்று விட்டு கணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னக்கரை அடுத்த லட்சுமி நகர் பகுதியில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோழி இறைச்சி கடை நடத்திவரும் சிலம்பரசன் என்பவர் தனது மனைவி அகிலாண்டேஸ்வரி மற்றும் மகன், மகளுடன் வசித்து வருகிறார். நேற்று இரவு வீட்டிற்கு சென்ற சிலம்பரசன் இன்று காலை வெளியே வராத நிலையில் அறையிலிருந்து வெளியே வந்த சிலம்பரசனின் மகள் தனது தாய் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடப்பதையும், அருகில் தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அலறியுள்ளார்.

இதனை அடுத்து அருகில் உள்ளவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற பல்லடம் காவல்துறையினர் இருவரது உடல்களையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பான விசாரணையில் அகிலாண்டேஸ்வரி மற்றும் சிலம்பரசன் இடையே கடந்த சில நாட்களாக குடும்ப தகராறு இருந்து வந்ததாகவும் சிலம்பரசன் மது அருந்துவதால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இவர்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டு வந்த நிலையில் இச்சம்பவம் நடைபெற்றதாக முதல்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

 

The post திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மனைவியை வெட்டிக் கொன்று கணவன் தற்கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Palladam ,Tirupur district ,Tirupur ,Lakshmi Nagar ,Chinnakara ,
× RELATED திருப்பூரில் காவலர்களின் காலில் விழுந்து வணங்கிய பெண்