×

திருப்பூரில் காவலர்களின் காலில் விழுந்து வணங்கிய பெண்

*வைரலாகும் வீடியோ

திருப்பூர் : திருப்பூர் பல்லடம் சாலை வித்தியாலயம் பகுதியில் நேற்று விவசாயிகள் தற்காப்பு பேரணி நடைபெற்றது. இதற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வித்யாலயம் நோக்கி சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் திடீரென போலீசாரின் வாகனத்தின் முன்பாக நின்று வாகனத்தை வணங்கிக் கொண்டிருந்தார். தொடர்ந்து போலீசார் நின்று கொண்டிருந்த பகுதிக்குச் சென்ற அப்பெண் போலீசார் எதிர்பாராத நேரத்தில் தான் காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றிவிட்டு போலீசாரின் காலில் விழுந்து வணங்கினார்.

போலீசார் சுதாரித்துக் கொண்டு அப்பெண்ணை எழுப்புவதற்கு முயன்றபோது அப்பெண் தானாகவே எழுந்து காவலர்களின் பணி போற்றத்தக்கது என கூறிக்கொண்டு வந்த திசையிலேயே சென்றுள்ளார். அப்பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் ஒருவர் மூலம் செல்போனில் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post திருப்பூரில் காவலர்களின் காலில் விழுந்து வணங்கிய பெண் appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Palladam Salai Vidyalayam ,Vidyalayam ,
× RELATED காவலர்கள் காலில் விழுந்து மரியாதை செலுத்திய பெண்: வீடியோ வைரல்