×

குமுளியில் ஆட்டோ தீவைத்து எரிப்பு

கூடலூர்: கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம் குமுளியை சேர்ந்தவர் விஷ்ணு. இவர் தனக்கு சொந்தமான ஆட்டோவை நேற்று முன் தினம் இரவு வழக்கம்போல் சாலையோரம் நிறுத்திவிட்டு தூங்கச்சென்றார். நேற்று காலை அவரது ஆட்டோ தீ பிடித்து எரிவதாக அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விஷ்ணு அங்கிருந்தவர்கள் உதவியுடன் தீயை அணைக்க முயன்றார். ஆனால் அதற்குள் ஆட்டோ முழுமையாக எரிந்து சேதமானது. மேலும் அருகில் நிறுத்தி வைத்திருந்த 2 ஆட்டோக்களின் முன் பகுதியில் பணம் வைக்கும் பெட்டி உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post குமுளியில் ஆட்டோ தீவைத்து எரிப்பு appeared first on Dinakaran.

Tags : Kumuli ,Vishnu ,Idukki district ,Kerala ,
× RELATED திரு.மாணிக்கம்: விமர்சனம்