×

கேரள அரசுக்கு விவசாயிகள் கண்டனம்

நாமக்கல், டிச.10: முல்லை பெரியாறு விவகாரத்தில், கேரள அரசுக் விவசாயிகள் சங்கம் கண்டம் தெரிவித்துள்ளது. உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தென்மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக முல்லைப் பெரியாறு அணை உள்ளது. ஆண்டுதோறும் அணையின் பராமரிப்பு பணி நடைபெறும். ஆண்டு பராமரிப்பு பணியை, தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை துறை மூலம் மேற்கொள்ளவேண்டும். இதற்கு அனுமதி அளிக்க கேரள அரசு மறுத்து வருகிறது. இதற்கு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post கேரள அரசுக்கு விவசாயிகள் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Kerala Govt ,Namakkal ,Kerala Government Farmers' Association ,president ,Tamil Nadu Farmers Association ,Velusami ,Narayanasamy Naidu ,Tamil Nadu ,Kerala Government ,
× RELATED கரூர் நாமக்கல் பைபாஸ் சாலையோரம் நிழற்குடைகளை சீரமைக்க வேண்டும்