×

இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

கே.வி.குப்பம், டிச.10: கே.வி.குப்பம் அடுத்த சென்னங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(40). லாரி டிரைவர். இவரது மனைவி கவிதா (33). தம்பதிக்கு 15 வயதில் பெண் குழந்தையும், 10 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் கவிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவ்வபோது மருத்துவமணைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் மனவேதனையடைந்த அவர் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த கே.வி.குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் சீதா மற்றும் போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : KV Kuppam ,Suresh Kumar ,Chennankuppam ,Lorry ,Kavita ,
× RELATED பழநி அ.கலையம்புத்தூரில் கால்நடை தடுப்பூசி முகாம்