- அ.கலையம்புதூர், பழனி
- பழனி
- கால்நடை பராமரிப்பு துறை
- அ.கலையம்புதூர்
- உதவி இயக்குனர்
- கால்நடை மருத்துவம்
- டாக்டர்
- சுரேஷ் குமார்
- முருகன்
- சுவேதிகா…
- தின மலர்
பழநி, டிச. 24: பழநி அருகே அ.கலையம்புத்தூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வெறிநோய் தடுப்பூசி முகாம் நடந்தது. கால்நடை உதவி இயக்குநர் டாக்டர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். கால்நடை மருத்துவர்கள் முருகன், சுவேதிகா தலைமையிலான மருத்துவ குழுவினர் மூலம் வளர்ப்பு மற்றும் தெருவில் சுற்றி திரிந்த நாய்களுக்கு இலவசமாக தடுப்பூசிகள் செலுத்தினர்.
மேலும் சோப்புகள், நாய்களின் இதர நோய்களுக்கான மருந்துகள் போன்றவை வழங்கப்பட்டன. இம்முகாமில் 65 வளர்ப்பு நாய்கள், 30 தெரு நாய்கள், 5 பூனைகளுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தொடர்ந்து 65 பசு மாடுகள் மற்றும் 85 எருமை மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
The post பழநி அ.கலையம்புத்தூரில் கால்நடை தடுப்பூசி முகாம் appeared first on Dinakaran.