×

தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

பள்ளிபாளையம், டிச.8: பள்ளிபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு, பள்ளிபாளையம் நகர்புற சுகாதார மையம், நான்கு தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ முகாம் நடைபெற்றது. 5 மருத்துவர் குழுவினரால், நகராட்சியில் பணியாற்றும் 99 தூய்மை பணியாளர்களுக்கு, அடிப்படை மருத்துவ பரிசோதனைகள் செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கினர். முகாமை நகரமன்ற தலைவர் செல்வராஜ் தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் பாலமுருகன், நகராட்சி ஆணையாளர் தயாளன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Pallipalayam ,Pallipalayam Urban Health Center ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி மது கடத்திய டிராக்டர் டிரைவர் கைது