- வீணா
- வேணுகானம்
- வள்ளியூர் சாமியார்போதை
- முத்துகிருஷ்ண சுவாமி
- Gurupuja
- வள்ளியூரில்
- 111வது குரு பூஜை தேர் மற்றும் குரு ஜெயந்தி விழா
- லலிதா கலா மந்திர்
- வீணை வேணுகானம்
வள்ளியூர், டிச.8: வள்ளியூர் முத்துகிருஷ்ண சுவாமியின் 111வது குருபூஜை தேரோட்டம் மற்றும் குரு ஜெயந்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் தொடர்ந்து தினமும் விசேஷ பூஜைகள், கலைநிகழ்ச்சிகள் மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் நேற்று லலிதா கலா மந்திர் கலைஞர் வீணை முத்துகிருஷ்ணன் மற்றும் புல்லாங்குழல் மணிகண்டன், எஸ்.என். ரமேஷ் வழங்கும் வீணா வேணுகானம் நிகழ்ச்சி நடந்தது. மேலும் நேற்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜைகளும் தொடர்ந்து மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜைகளும் பஜனையும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. ஏற்பாடுகளை பூஜ்யஸ்ரீ மாதாஜி வித்தம்மா தலைமையேற்று முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
The post வள்ளியூர் சாமியார்பொத்தை புரம் முத்துகிருஷ்ணசுவாமி குருபூஜையில் வீணா வேணுகானம் நிகழ்ச்சி appeared first on Dinakaran.