- செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி
- தகவல் பெறும் உரிமை
- செங்கல்பட்டு
- செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி
- செங்கல்பட்டு பரனூர்…
- தின மலர்
செங்கல்பட்டு : செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் மூலதன கட்டுமான செலவு மட்டுமே வசூல் செய்யப்பட்டதாக ஆர்டிஐ மூலம் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், நீண்ட காலமாக செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியை மூட வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர். இதனிடையே தாம்பரம் சிட்லபாக்கத்தை சேர்ந்த தயானந்த கிருஷ்ணன் கேட்ட கேள்விக்கு ஆர்டிஐ அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அந்த பதிலில், “45 கி.மீ தூரம் உள்ள பரனூர் சுங்க சாலை இரும்புலியூரில் தொடங்கி மேலவளம்பேட்டை நெல்வாய் சந்திப்பில் முடிவடைகிறது.
இந்த சுங்கச் சாலை 2004 அக். நான்கு வழிச்சாலையாகவும் 2023 மே மாதம் 8 வழிச்சாலையாகவும் மாற்றப்பட்டது. இந்த சாலை அமைக்க மொத்தம் 1036.91 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் 2005 ஏப்.முதல் 2024 வரை ரூ.596.80 கோடி மட்டுமே சுங்க கட்டணமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.அதாவது 19 ஆண்டுகள் 5 மாதங்களில் 57.6% மூலதன கட்டுமான செலவு மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள மூலதன செலவில் மீட்க வேண்டிய தொகை 440.11 கோடி ரூபாயாக உள்ளது. 42.4% சுங்க கட்டணம் இன்னும் நிலுவையில் உள்ளது,” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் நாள் ஒன்றுக்கு 53,680 வாகனங்கள் கடந்து செல்கின்றன. பல்வேறு அபிவிருத்தி பணிகள் நடைபெற்று வந்தாலும் சுங்கக் கட்டணம் இன்னும் 42%க்கும் மேல் வசூல் செய்ய வேண்டும் என்பது பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
The post செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் 19 ஆண்டுகளில் 57.6% மூலதன கட்டுமான செலவு மட்டுமே வசூல் :ஆர்டிஐ மூலம் அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.