- கும்பாபிஷேக் விழா
- Dharamangalam
- சின்ன பிள்ளை
- எம்ஜிஆர் காலனி
- ராஜகணபதி
- முருகன் கோயில்
- கும்பாபிஷேக் விழா
தாரமங்கலம், டிச.6: தாரமங்கலம் எம்ஜிஆர் காலனி பகுதியை சேர்ந்தவர் சின்னப்பிள்ளை(60). இவர் தனது மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டின் அருகில் உள்ள ராஜகணபதி முருகன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சின்னப்பிள்ளை, சுவாமி தரிசனம் செய்து விட்டு வீட்டிற்கு கிளம்பும்போது, அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிக்கொடி மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். மேலும், அருகில் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு ஆய்வு செய்து, நகை பறித்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post கும்பாபிஷேக விழாவில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு appeared first on Dinakaran.