சேலம், மார்ச் 16: சேலம் மாநகராட்சியில் பொதுமக்களின் தேவைகள், புகார்களை தெரிவிக்க தொடர்பு அலுவலர்கள் நியமனம் செய்து, செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சேலம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சேலம் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அத்தியாவசிய பணிகளான குடிநீர், சாலை, தெருவிளக்கு வசதிகள், துப்புரவு பணிகள், பிறப்பு, இறப்பு சான்றிதழ் மற்றும் பிற சேவைகள் தொடர்பான தேவைகள் மற்றும் புகார்களை உடனுக்குடன் தெரிவித்து குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள, சேலம் மாநகராட்சியின் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவர்களின் செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
