- கே. வி. ஸ்டக்
- கே
- துணை
- இன்ஸ்பெக்டர்
- சீதா
- பசுமாத்தூர்
- ரயில்வே
- மேம்பாட்டு மையம்
- ஸ்கொலிகோண்டா
- பசுமாத்தூர்
- தின மலர்
கே.வி.குப்பம், டிச.6: கே.வி.குப்பம் சப்- இன்ஸ்பெக்டர் சீதா மற்றும் போலீசார் நேற்று பசுமாத்தூர் ரயில்வே மேம்பாலம் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, பள்ளிகொண்டாவில் இருந்து பசுமாத்தூர் வழியாக கே.வி.குப்பம் நோக்கி வந்த காரை நிறுத்தினர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றதால், போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். காரை சோதனை செய்ததில் 6 கிலோ கஞ்சா பொட்டலங்கள், 5 பட்டாக்கத்திகள் சிக்கியது. விசாரணையில் அவர்கள் வேலூர் அடுத்த அரியூரை சேர்ந்த தேஜேஷ்(23), பூர்ணசந்திரன்(23), கார்த்திகேயன்(27), அஜித்குமார்(23), ராஜேஷ்(23), அபி என்ற அபினேஷ்(20) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து கார் மற்றும் பட்டாக்கத்திகளை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து 6 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை காட்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதானவர்கள் கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. அதற்காக பட்டாக்கத்திகளை வைத்திருந்ததாகவும், கஞ்சா பொட்டலங்களை குறைந்த விலைக்கு வாங்கி ஆந்திரா மாநிலத்தில் விற்பனை செய்ய கொண்டு செல்வதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The post 6 கிலோ கஞ்சாவுடன் 6 வாலிபர்கள் கைது 5 பட்டாக்கத்திகள், கார் பறிமுதல் கே.வி.குப்பம் அருகே வாகன சோதனையில் சிக்கினர் appeared first on Dinakaran.