விகேபுரம், டிச. 6: வி.கே.புரம் பகுதியிலுள்ள தனியார் பள்ளி விடுதியில் இருந்து கடந்த இரு நாட்களுக்கு முன்னர் வெளியேறிய 12 வயதான மாணவி கேரளாவிற்கு செல்ல திட்டமிட்டார். அப்போது அங்கு வந்த சிவந்திபுரம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான அன்னராஜ் (49), தனியாக நின்று கொண்டிருந்த மாணவியை மீட்டு வி.கே.புரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து ஆட்டோ டிரைவரை எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
The post வி.கே.புரம் அருகே பள்ளி மாணவியை மீட்ட ஆட்டோ டிரைவருக்கு நெல்லை எஸ்பி பாராட்டு appeared first on Dinakaran.