×

புயல் பாதித்த மாவட்ட மக்களுக்கு வணிகர் சங்கம் சார்பில் நிவாரண பொருட்கள்

நாமக்கல், டிச.6: பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில், நிவாரண பொருட்களை நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அனுப்பி வருகிறது. இதையொட்டி, நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், பல்வேறு வணிகர் சங்கங்கள் மற்றும் வணிகர்கள் வழங்கிய ₹2 லட்சம் மதிப்புள்ள காய்கறி, மளிகை பொருட்கள் போன்ற நிவாரண பொருட்கள், மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் நேற்று வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார், தினசரி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கத்தலைவர் மனோகரன், மாவட்ட செயலாளர் பொன்.வீரக்குமார், பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

The post புயல் பாதித்த மாவட்ட மக்களுக்கு வணிகர் சங்கம் சார்பில் நிவாரண பொருட்கள் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Namakkal district ,Villupuram ,Cuddalore ,Cyclone Benjal ,Namakkal District Tamil Nadu Federation of Merchants' Associations ,
× RELATED நாமகிரிப்பேட்டை அருகே பள்ளிக்கு...