×

மாமனார், மருமகனை தாக்கிய பெயிண்டர் கைது

புதுச்சேரி, டிச. 5: புதுவை நைனார்மண்டபம் புதுநகர் சேர்ந்தவர் ராமதாஸ் (64). இவர் திண்டிவனத்தில் பிளாஸ்டிக் பாட்டில் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது மாமனார் கண்ணன் (85) கடலூரில் வசிக்கிறார். ஓய்வு பெற்ற இளநிலை பொறியாளர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கண்ணன், அவரது மருமகன் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனிடையில் புதுவையில் மழை பெய்து கொண்டிருந்தபோது கண்ணன் அருகே உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது கடையில் நின்றுக்கொண்டிருந்த பெயிண்டர் தரணி என்பவர் கண்ணனை பார்த்து மழையில் ஏன் வெளியில் வருகிறாய் என கேட்டு, தலையில் தட்டியுள்ளார். இதற்கு கண்ணன், வயது வித்தியாசம் இல்லாமல் இப்படி செய்யலாமா என கேட்டதற்கு, தரணி அவரை கையால் அடித்துள்ளார். பின்னர் இச்சம்பவம் குறித்து கண்ணன், அவரது மருமகனிடம் தெரிவித்துள்ளார். உடனே ராமதாஸ் இச்சம்பவம் குறித்து தரணியிடம கேட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த தரணி, ராமதாஸை சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ராமதாஸ் முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தரணி மீது வழக்குபதிந்து கைது செய்தனர்.

The post மாமனார், மருமகனை தாக்கிய பெயிண்டர் கைது appeared first on Dinakaran.

Tags : Painter ,Puducherry ,Ramadas ,Puduvai Nainarmandapam Pudunagar ,Dindivan ,Kannan ,Cuddalore ,
× RELATED சென்னை கொடுங்கையூரில் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் கைது!!