×

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த முதலை

சிதம்பரம், டிச. 27: சிதம்பரம் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த முதலையால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்குசாலியன் தோப்பு பகுதி ராஜன் வாய்க்கால் தெருவை சேர்ந்தவர் முனியன் மகன் சக்திவேல். இவர் நேற்றுமுன்தினம் நள்ளிரவு வீட்டின் வெளியே வந்தபோது, வீட்டு வாசலில் முதலை ஒன்று கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சக்திவேல் சிதம்பரம் தீயணைப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில், சிதம்பரம் தீயணைப்பு நிலைய அலுவலர் மணிமாறன் தலைமையில் சிறப்பு நிலைய அலுவலர் பிரபாகரன், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டின் முன்பு கிடந்த சுமார் 7 அடி நீளமும், 300 கிலோ எடையும் கொண்ட முதலையை பிடித்து சிதம்பரம் வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
இதைதொடர்ந்து பிடிபட்ட முதலையை சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி நீர் தேக்கத்தில் பத்திரமாக விடப்பட்டது. குடியிருப்பு பகுதிக்குள் முதலை புகுந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

The post குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த முதலை appeared first on Dinakaran.

Tags : Chidambaram ,Sakthivel ,Muniya ,Rajan Vaikkal Street, South Salian Thoppu ,Cuddalore district ,
× RELATED முதல்வருடன் ப.சிதம்பரம் சந்திப்பு