×

கோவை அரசு மருத்துவ கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு வெள்ளை அங்கி வழங்கும் விழா

 

கோவை, டிச. 4: கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் நடப்பாண்டில் 200 எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்பப்பட்டன. அதன்படி, 95 ஆண்கள், 105 பெண்கள் என மொத்தம் 200 பேர் கலந்தாய்வு அடிப்படையில் கல்லூரியில் சேர்ந்தனர். இவர்களில், அரசின் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 13 பேர் சேர்ந்துள்ளனர்.

இந்த முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் கடந்த அக்டோபரில் துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில், முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்களுக்கு வெள்ளை அங்கி வழங்கும் விழா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று நடந்தது.

இதில், கல்லூரியின் முதல்வர் நிர்மலா தலைமை வகித்து மாணவர்களுக்கு வெள்ளை அங்கிகளை வழங்கினார். பின்னர், மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். துணை முதல்வர் சுஜாதா, பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

The post கோவை அரசு மருத்துவ கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு வெள்ளை அங்கி வழங்கும் விழா appeared first on Dinakaran.

Tags : White coat distribution ,Government Medical College ,Coimbatore ,MBBS ,Coimbatore Government Medical College Hospital ,Coimbatore Government Medical College ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி...