- நதி நிறுவனம்
- கோயம்புத்தூர்
- பெங்களூர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ராஜ்துரை இ-மொபிலிட்டி எல்எல்பி
- ராமநாதபுரம், கோவை
- GRG கல்வி நிறுவனங்கள்…
- தின மலர்
கோவை, ஜன.4: பெங்களூரில் செயல்பட்டு வரும் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான ரிவர் நிறுவனம், தமிழகத்தில் தனது 2வது ஷோரூமை ராஜ்துரை இ-மொபிலிட்டி எல்எல்பி நிறுவனத்துடன் இணைந்து கோவை ராமநாதபுரத்தில் துவங்கியுள்ளது. இந்த புதிய ஷோரூமை ஜிஆர்ஜி கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர்.நந்தினி துவக்கி வைத்தார். இண்டீ ஸ்கூட்டர்கள்,அக்செஸ்சரீஸ் மற்றும் அதை சேர்ந்த வணிகப் பொருட்கள் அனைத்தையும் வாடிக்கையாளர்களுக்கு அழகாக காட்சிப்படுத்தும் வகையில் இப்புதிய ரிவர் ஷோரூம் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இங்கு இண்டீஸ் கூட்டர்கள் உடனடியாக விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் விலை ரூ.1,42,999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கோவையை அடுத்து வேலூர்,ஈரோடு மற்றும் திருப்பூரில் கடைகளைத் திறக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது என இந்நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அரவிந்த் மணி தெரிவித்தார்.
The post ரிவர் நிறுவனத்தின் விற்பனை நிலையம் கோவையில் துவக்கம் appeared first on Dinakaran.