×

பொதுமக்கள் வேதனை இன்றுடன் பதவி காலம் நிறைவு மகிழ்ச்சியுடன் விடைபெற்ற ஊராட்சி நிர்வாகிகள்

பெ.நா.பாளையம், ஜன.5: தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சி, ஒன்றியம், மாவட்ட கவுன்சிலர்களின் பதவிகளுக்கு கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடந்தது. வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 2020 ஜனவரி முதல் வாரத்தில் பெறுப்பேற்றுக் கொண்டனர். இவர்களின் பதவி காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதை தொடர்ந்து ஒரு சில ஒன்றியம் மற்றும் ஊராட்சி அலுவலகத்தில் மக்கள் பிரதிநிதிகள்கூட்டம் நடத்தி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரம் ஊராட்சி தலைவர் கார்திகேஸ்வரி சுந்தர்ராஜன் தலைமையில் ஊராட்சி அலுவலத்தில் துணைத்தலைவர் திருநாவுக்கரசு மற்றும் ஒன்றிய, வார்டு கவுன்சிலர்கள் நேற்று ஒன்று கூடினர். இதனை தொடர்ந்து ஒன்றியம் மற்றும் ஊராட்சி கவுன்சிலர்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. அதன்பின், அனைவரும் ஊராட்சியில் பணிபுரியும் அலுவலர்கலுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

The post பொதுமக்கள் வேதனை இன்றுடன் பதவி காலம் நிறைவு மகிழ்ச்சியுடன் விடைபெற்ற ஊராட்சி நிர்வாகிகள் appeared first on Dinakaran.

Tags : Panchayat ,P.N. Palayam ,Tamil Nadu ,
× RELATED பெரியபாளையம் அருகே ஊராட்சியை...