×

குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்

மல்லசமுத்திரம், டிச.4: மல்லசமுத்திரம் அருகே கொன்னையாரில், திருமணிமுத்தாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. பெஞ்சல் புயல் தாக்கத்தால், ஏற்காடு மற்றும் சேலத்தில் பெய்த கனமழையின் காரணமாக, திருமணிமுத்தாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வையப்பமலை அருகேயுள்ள, கொன்னையார் கிராமத்தில் திருமணிமுத்தாறு ஆற்றங்கரையை ஒட்டிய பகுதியில் 16 குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதுகுறித்து தகவலறிந்த திருச்செங்கோடு ஆர்.டி.ஓ.,சுகந்தி, தாசில்தார் விஜயகாந்த், வி.ஏ.ஓ.,தினேஷ்குமார் நேரில் பார்வையிட்டு பொதுமக்களை அங்கிருந்து மீட்டு அரசுப்பள்ளியில் தங்க வைத்து, அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தனர்.

The post குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் appeared first on Dinakaran.

Tags : Mallasamutram ,Konnaiyar ,Varanadimuthar ,Yercaud ,Salem ,Vaiyapamalai ,Dinakaran ,
× RELATED நைனாமலை அடிவாரம் ஆஞ்சநேயர் கோயிலில் ஜெயந்தி விழா