- நிலக்கோட்டை
- சித்தர் நட்டா
- திண்டுக்கல்
- திண்டுக்கல் கலெக்டர்
- சித்தர் நத்தம் இபி காலனி
- நிலக்கோட்டை சித்தர் நத்தம்
- இபி காலனி
திண்டுக்கல், டிச. 3: நிலக்கோட்டை அருகே சித்தர்கள் நத்தம் இ.பி.காலனியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. நிலக்கோட்டை அருகே சித்தர்கள் நத்தம் இ.பி. காலனி மக்கள் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் பூங்கொடியிடம் மனு அளித்தனர்.
அம்மனுவில் தெரிவித்திருந்தாவது: நிலக்கோட்டை தாலுகா சித்தர்கள் நத்தம் இ.பி. காலனியில் பல ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். நாங்கள் ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு தாசில்தாரிடம் மனு அளித்தோம். அதற்கு தாசில்தார் எங்கள் பகுதி அருகே அரசு புறம்போக்கு நிலம் உள்ளது.
அதில் உங்களுக்கு பட்டா வழங்கப்படும் என தெரிவித்தார். இந்நிலையில் விநாயகபுரம் காலனியை சேர்ந்த பொதுமக்கள் அந்த இடத்தில் பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து முள்வேலி வைத்து அடைத்து விட்டனர். மேலும் சிலர் எங்களை மிரட்டி வருகின்றார். எனவே கலெக்டர் இதுகுறித்து விசாரணை செய்து எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்திருந்தனர்.
The post நிலக்கோட்டை சித்தர்கள் நத்தத்தில் இலவச வீட்டு மனை பட்டா கோரி மனு appeared first on Dinakaran.