×

பெண் மீது சரமாரி தாக்குதல் போலீசார் விசாரணை

நிலக்கோட்டை, டிச. 19: கொடைரோடு அருகே முருகத்துரான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அமிர்தம் (50). இவர் நேற்று காலை பள்ளபட்டி- நிலக்கோட்டை சாலையோரம் மாடு மேய்த்து கொண்டிருந்ததாத கூறப்படுகிறது. அப்போது இவரை அதே பகுதியை சேர்ந்த மர்ம நபர்கள் சிலர் கொலைவெறியுடன் சராமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்து மயங்கி விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அம்மையநாயக்கனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுவிக்கு பின் அவர் மேல் சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து அமிர்தம் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் அம்மையநாயக்கனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக அமிர்தத்தின் உறவினர்கள் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய கோரி அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இன்ஸ்பெக்டர் குருவத்தாய் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதன்பிறகே அனைவரும் கலைந்து சென்றனர்.

The post பெண் மீது சரமாரி தாக்குதல் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Nilakottai ,Amirtham ,Murugathuranpatti ,Kodai Road ,Pallapatti-Nilakottai road ,
× RELATED நிலக்கோட்டை அருகே வளர்ச்சித் திட்ட பணிகளுக்கு பூமிபூஜை