×

தமிழ்நாட்டில் இருந்து சபரிமலை செல்வோருக்கு காவல்துறை சார்பாக அறிவுறுத்தல்..!!

சென்னை: தமிழ்நாட்டில் இருந்து சபரிமலை செல்வோருக்கு காவல்துறை சார்பாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் சுமார் 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக கேரள அரசின் தலைமைச் செயலாளருக்கு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்த நிலையில் சபரிமலை செல்வோருக்கு காவல்துறை சார்பாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதில், நெரிசலை தவிர்க்க தரிசன வரிசைக்கான டிஜிட்டல் முன்பதிவு செய்து ஒதுக்கப்பட்ட நேரத்தை கடைப்பிடிக்க வேண்டும்.சபரிமலை ஏறும்போது 10 நிமிடங்கள் நடந்தால் 5 நிமிடம் ஓய்வெடுக்க அறிவுறுத்தல். சபரிமலை பகுதியில் இலவச உதவி எண் 14432-ஐ தொடர்பு கொண்டு காவல் துறையிடம் உதவி கேட்கலாம். பயணப்பாதையில் உள்ள மருத்துவ மையங்கள் ஆக்ஸிஜன் பார்லர்களின் வசதியை பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளது.

The post தமிழ்நாட்டில் இருந்து சபரிமலை செல்வோருக்கு காவல்துறை சார்பாக அறிவுறுத்தல்..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Sabarimala ,Chennai ,Sabarimalai Ayyappan Temple ,Mandala Pooja ,Sami ,
× RELATED கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் ஐயப்ப...