சிவகங்கை, டிச.2: சிவகங்கையில் வானவில் மன்ற கருத்தாளர்களுக்கு மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அமைப்புசார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாலா தலைமை வகித்தார். கருத்தாளர் பிரியங்கா வரவேற்றார். வானவில் மன்ற இணை ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியசாமி வானவில் மன்ற கருத்தாளர்களின் பணிகள் குறித்தும், அறிவியல் செயல் திட்டம் குறித்தும் விளக்கினார்.
கருத்தாளர்கள் லலிதா, ரெத்தினம், ராஜயோகம், வேணி சொர்ணதேவி, ஜெயபிரியா ஆகியோர் கலவைகள், முக்கோணங்கள் அவற்றின் பண்புகள், மின் துகள்களின் இடமாற்றம், பொருள்களின் எடையும் புவியீர்ப்பு முடுக்கமும், தாவர சாகுபடி போன்ற அறிவியல் பரிசோதனைகள், கணித செயல்பாட்டு பயிற்சி அளித்தனர். எதிர்கால திட்டம் மற்றும் வேலை அறிக்கையின் தொகுப்பும் கருத்தாளர்களிடம் இருந்து பெறப்பட்டது. சிவகங்கை கிளைத் தலைவர் மணவாளன் வாழ்த்துரை வழங்கினார். வானவில் மன்ற கருத்தாளர் செந்தாமரை நன்றி கூறினார்.
The post வானவில் மன்ற கூட்டம் appeared first on Dinakaran.