- காந்தர்வகோட்டை
- கந்தர்வகோட்டை
- புதுக்கோட்டை
- கந்தர்வகோட்டை ஒன்றியம் வானவில் மன்றம்
- பஞ்சாயத்து யூனியன் நடுத்தரப் பள்ளி
- அகாச்சி பட்டி
- தலைமை ஆசிரியர் (
- பி) மணிமேகலை
கந்தர்வகோட்டை, டிச.9: புதுக்கோட்டை மாவட்டம். கந்தர்வகோட்டை ஒன்றியம் வானவில் மன்றத்தின் சார்பில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் மழைக்கால நோய்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் (பொ) மணிமேகலை தலைமை வகித்தார். கந்தர்வகோட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒன்றிய செயலாளரும், பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா மழைக்கால நோய்கள் குறித்து பேசினார். அப்போது,காய்ச்சல் ஒரு வைரஸ் தொற்றுநோயாக மாறி ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது.
டெங்கு காய்ச்சல் என்பது ஏடிஸ் கொசுகள் மூலம் வைரஸால் ஏற்படும் தொற்று ஆகும், டெங்கு காய்ச்சல் லேசான காய்ச்சல் போன்ற அறிகுறிகளில் இருந்து டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சல் உட்பட கடுமையான நோய் வரை மாறுபடுகிறது, இது உடனடியாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால் உயிருக்கு ஆபத்தானது.டைபாய்டு காய்ச்சல் என்பது சால்மோனெல்லா டைஃபியால் ஏற்படும் பாக்டீரியா தொற்று ஆகும், இது முதன்மையாக அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரின் மூலம் பரவுகிறது. குறிப்பாக மழைக்காலத்தில் தண்ணீர் மாசுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.
மலேரியா என்பது பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணிகளால் ஏற்படும் ஒரு உயிருக்கு ஆபத்தான நோயாகும். இது பாதிக்கப்பட்ட பெண் அனாபிலிஸ் கொசுக்கள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. டெங்கு காய்ச்சலைப் போலவே, இது வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் பரவலாக உள்ளது. மேலும் மழைக்காலத்தில் அதன் ஆபத்து அதிகரிக்கிறது.மழைக்காலத்தில் ஏற்படும் நோய்களான டெங்கு, சிக்கன் குனியா, மலேரியா, காலரா, டைபாய்டு, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வயிற்று நோய் தொற்றுகள் உள்ளிட்ட நோய்கள் குறித்து விழிப்புணர்வு மூலமாக தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்று பேசினார்.
The post கந்தர்வகோட்டை அருகே மழைக்கால நோய்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.