×

சுற்றுலா பயணிகளை கவரும் சூரியகாந்தி மலர்கள்

 

ஊட்டி, டிச.2: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பூத்துள்ள சூரியகாந்தி மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. ஊட்டியில் நூற்றாண்டு புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்கா உள்ளது. தோட்டக்கலைத்துறை கட்டுபாட்டில் உள்ள இப்பூங்காவை ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்காமல் செல்வதில்லை.

இந்நிலையில் அடுத்த ஆண்டு கோடை சீசனுக்காக பூங்கா தயராகி வருகிறது. பூங்காவின் பெரும்பாலான பகுதிகளில் மலர்கள் குறைவாக உள்ள நிலையில், பெரணி செடிகள் அடங்கிய கண்ணாடி மாளிகையின் அருகே உள்ள சூரியகாந்தி செடிகளில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இவற்றை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பதுடன் அவற்றை புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

The post சுற்றுலா பயணிகளை கவரும் சூரியகாந்தி மலர்கள் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Ooty Government Botanical Garden ,Horticulture Department ,
× RELATED 176 ஆண்டு பழமையான தாவரவியல் பூங்கா ரூ.3...