×

தும்மனட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் தேர்வு

 

ஊட்டி, டிச.24: ஊட்டி அருகே தும்மனட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக புதிய தலைவராக ராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டார். தும்மனட்டி அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கணேஷ் தலைமை வகித்தார். தும்மனட்டி கிராம தலைவர் ராமகிருஷ்ணன், நாக்குபெட்டா நலச்சங்க தலைவர் பாப, தும்மனட்டி ஊராட்சி மன்ற தலைவர் சந்தியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெற்றோர் ஆசிரியர் கழக புதிய தலைவராக ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து, பள்ளி மாணவர்களிடம் அவர் பேசுகையில், பள்ளி வளர்ச்சிக்காகவும், அடுத்த கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கவும் பாடுபடுவேன் என்றார். இந்நிகழ்ச்சியில், தும்மனட்டி கிராமத்தை சுற்றியுள்ள 11 கிராமத்தை சேர்ந்த ஊர் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post தும்மனட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் தேர்வு appeared first on Dinakaran.

Tags : President of the ,Parent Teacher Association ,Thummanatti Government Higher Secondary School ,Ooty ,Ramachandran ,President of ,Parent Teacher Association of Thummanatti Government Higher Secondary School ,Dinakaran ,
× RELATED கலை, கலாசாரம் உள்ளிட்ட 7 பிரிவுகளில்...