×

கோத்தகிரி பகுதியில் மேரக்காய் மகசூல் அதிகரிப்பு

 

கோத்தகிரி, டிச.25: கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மேரக்காய் மகசூல் அதிகரித்து காணப்படுகிறது. கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளான பேரகணி, எர்சபெட்டா, மிளித்தேன், பர்ன்சைடு, நெடுகுளா, கூக்கல்தொரை, கட்டபெட்டு, தொட்டன்னி பகுதிகளில் தற்போது மேரக்காய் மகசூல் அதிகரித்து அறுவடைக்கு தயாராக உள்ளது. இதனை விற்பனைக்கு எடுத்துச்செல்லும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

தற்போது உறை பனியால் கொடிகள் காயத் தொடங்கியுள்ளது. இதனால் முன்கூட்டியே அறுவடை செய்கின்றனர். கடந்த வாரம் வரை மேரக்காய் கிலோ ரூ. 25 வரை விற்பனையான நிலையில் தற்போது 12, 15 ரூபாய் மட்டுமே விற்பனையாவதால் விவசாயிகள் குறைந்த லாபத்தையே பெற்று வருகின்றனர். மேலும் கோத்தகிரி பகுதியில் உறை பனியின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மேரக்காய் விளைச்சலும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

The post கோத்தகிரி பகுதியில் மேரக்காய் மகசூல் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Kotagiri ,marakkai ,Perakani ,Ersapetta ,Milithen ,Burnside ,Nedukula ,Kookkalthora ,Katapettu ,Thottanni ,
× RELATED கோத்தகிரியில் மேக மூட்டம் நிலவுவதால்...