×

கீழப்பாவூர் அருகே வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

பாவூர்சத்திரம்,நவ.30: கீழப்பாவூர் அருகே குணராமநல்லூர் ஊராட்சி புல்லுக்காட்டுவலசையில் தமிழக அரசின் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் சுபா சக்தி தலைமை வகித்தார். துணை சேர்மன் முத்துகுமார், ஒன்றிய கவுன்சிலர் ஜான்சி ஜெயமலர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கவுன்சிலர் பேராசிரியர் சாக்ரடீஸ் வரவேற்றார். கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார். கீழப்பாவூர் வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார் தலைமையிலான குழுவினர் சிகிச்சை மேற்கொண்டனர். 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

The post கீழப்பாவூர் அருகே வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Kapom Project Medical Camp ,Geezapavur ,Bhavoorchatram ,Tamil Nadu government ,Gunaramanallur panchayat Pullukattuvala ,Keezhapavoor ,Panchayat Council ,President ,Subha Shakti ,Vice-Chairman ,Muthukumar ,Union Councilor ,Jhansi ,Geezappavur ,Dinakaran ,
× RELATED ஆவுடையானூர் பள்ளியில் இலவச சைக்கிள்