- ஆவுடையனூர்
- பாவூர்சத்திரம்
- ஆவுடையனூர் புனித அருள்பர் மேல்நிலைப் பள்ளி
- பள்ளி நிர்வாகி
- மொய்சன் அடிகளார்
- ஆவுடையனூர் ஊராட்சி மன்றம்
- ஜனாதிபதி
- மகேஸ்வரி முருகன்
- மாவட்ட கவுன்சிலர்
- சுப்பிரமணியன்
பாவூர்சத்திரம்,நவ.26: பாவூர்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி நிர்வாகி மோயீசன் அடிகளார் தலைமை வகித்தார். ஆவுடையானூர் ஊராட்சி மன்ற தலைவர் (பொறுப்பு) மகேஸ்வரி முருகன், மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ்லிகோரி முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் அந்தோணி அருள்பிரதீப் வரவேற்றார். பழனிநாடார் எம்.எல்.ஏ., கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை ஆகியோர் பங்கேற்று, 357 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினர். விழாவில் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சீனித்துரை, வட்டார காங்கிரஸ் தலைவர் குமார்பாண்டியன், பள்ளி நிர்வாக அலுவலர் அருள்செல்வராஜ், உதவி தலைமை ஆசிரியர்கள் ஹெலன்கெவின், சாந்தி, ஊராட்சி துணைத்தலைவர் செல்வமேரி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியை சாந்தி சகாய ஜோதி நன்றி கூறினார்.
The post ஆவுடையானூர் பள்ளியில் இலவச சைக்கிள் appeared first on Dinakaran.