×

முதலமைச்சர் கணினி தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ் வளர்ச்சி துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கணினி தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்க தமிழ் வளர்ச்சி துறை வாயிலாக ‘முதலமைச்சர் கணினி தமிழ் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. விருது தொகையாக ரூ.2 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படுகிறது. 2024ம் ஆண்டுக்குரிய முதலமைச்சர் கணினி தமிழ் விருதுக்கு தனியார் மற்றும் நிறுவனத்திடம் இருந்து, தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருட்கள் / செயலிகள் வரவேற்கப்படுகின்றன. விருதுக்கு அனுப்பப்பட உள்ள மென்பொருட்கள் 2021, 2022, 2023ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும்.

இந்த விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை தமிழ் வளர்ச்சி துறையின் வலைத்தளத்தில் (www.tamilvalarchithurai.tn.gov.in) இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை – 600008 என்ற முகவரிக்கு அஞ்சல் வாயிலாக 31.12.2024ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். கூடுதல் விவரம் அறிய விரும்புவோர் 044 – 28190412, 044 – 28190413 ஆகிய தொலைபேசி எண்களை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.

The post முதலமைச்சர் கணினி தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Tamil Nadu Government ,CHENNAI ,Department of Tamil Development ,Tamil ,Government ,Dinakaran ,
× RELATED ஹெல்மெட் அணிவது தனிப்பட்ட விருப்பம்...