×

விரும்பிய இடங்களில் பணியாற்ற சிஐஎஸ்எப் வீரர்கள் விண்ணப்பிக்கலாம்: விமானப்படை படை கமாண்டர் அறிவிப்பு

திருவொற்றியூர்: உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கக்கூடிய மத்திய தொழில் பாதுகாப்பு படை பிரிவு காவலர்கள் (சிஐஎஸ்எப்) தொழிற்சாலைகள், பாதுகாப்பு நிறுவனங்கள், உயர் நீதிமன்றம், சென்னை துறைமுகம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவர்கள் பணியில் சேரும்போது இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் மாற்றம் செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

மத்திய தொழில் பாதுகாப்பு படை காவலர்களின் கோரிக்கையை ஏற்று உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுடன் அவர்களுக்கு அரிய வாய்ப்பாக மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டன்ட் உத்தரவின்படி பெண்கள், திருமணமான ஆண், பெண், பணி ஓய்வு பெற உள்ளவர்கள் ஆகியோர்களுக்கு இந்த ஆண்டு முதல் சிறப்பு சலுகையாக அவர்கள் விரும்பிய ஊர்களுக்கு மாற்றப்பட மத்திய தொழில் பாதுகாப்பு படை பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் ஆண் மற்றும் பெண் காவலர்கள் தங்களுக்கு வேண்டிய ஊர்களுக்கு 10 இடங்களில் மூன்று இடங்களை தேர்வு செய்தால் அதன்படி பணி அமர்த்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர். பணி மாற்றம் செய்ய மத்திய தொழில் பாதுகாப்பு படை இணையதளத்தில் பதிவு செய்ய வலியுறுத்தப்படுகிறது. இதற்காக, விண்ணப்பிப்பவர்கள் அதிகாரிகளின் ஆய்வுக்கு பிறகு பணி மாற்றம் செய்யப்படும் என்று மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டன்ட் தெரிவித்துள்ளார்.

The post விரும்பிய இடங்களில் பணியாற்ற சிஐஎஸ்எப் வீரர்கள் விண்ணப்பிக்கலாம்: விமானப்படை படை கமாண்டர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : CISF ,Air Force ,Central Industrial Security Force ,Ministry of Home Affairs ,India ,High Court ,Chennai Port ,Commander ,
× RELATED கல்பாக்கம் அருகே மர்ம படகு கரை ஒதுங்கியது: போலீசார் விசாரணை