- சோழவரம் ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளிகள்
- சட்டமன்ற உறுப்பினர்
- புழல்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளிகள்
- Cholavaram
- மாதவரம்
- எஸ் சுதர்சனம்
- சோழவரம் ஜிஎன்டி சாலை…
- தின மலர்
புழல்: சோழவரத்தில் இயங்கும் ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு, புதிதாக கட்டப்பட்ட 6 கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். விழாவில் மாதவரம் எம்எல்ஏ எஸ்.சுதர்சனம் பங்கேற்றார். சோழவரம் ஜிஎன்டி சாலை அருகே சோழவரம் ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.69.17 லட்சம் மதிப்பீட்டில் 4 வகுப்பறைகள் கொண்ட கட்டிடமும், சோழவரம் அடுத்த நெற்குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டு சூரப்பட்டு கிராமத்தில் உள்ள ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடங்களும் கட்டி முடிக்கப்பட்டது.
இவ்வாறு, ரூ.97.17 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அரசுப் பள்ளிகளின் 6 கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். இந்த பள்ளிகளில் இதற்கான நிகழ்ச்சி நடந்தது. சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும், சோழவரம் ஒன்றியக்குழு துணை தலைவருமான வே.கருணாகரன் தலைமை தாங்கினார். சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தினி, மாணிக்கம், ஒன்றிய கவுன்சிலர் சுகவேணி முருகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சோழவரம் லட்சுமி முனிகிருஷ்ணன், நெற்குன்றம் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாதவரம் தொகுதி எம்எல்ஏவுமான எஸ்.சுதர்சனம் கலந்துகொண்டு, 2 பள்ளிகளுக்கும் நேரில் சென்று, புதிய கட்டிடங்களை குத்து விளக்கேற்றி வைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post சோழவரம் ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ.97.17 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடங்கள் திறப்பு: எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.