×

கவர்னர் ரவி ஓய்வெடுப்பதற்காக போக்குவரத்து சேவை நிறுத்தம்: திருத்தணியில் பரபரப்பு

திருத்தணி: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திருமலையில் சாமி தரிசனம் செய்ய சாலை மார்கமாக சென்ற நிலையில், திருத்தணியில் 45 நிமிடங்கள் போக்குவரத்து சேவையை போலீசார் தடுத்து நிறுத்தியதால், பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சென்னை ஆளுநர் மாளிகையில் இருந்து நேற்று சாலை மார்க்கமாக திருமலைக்குச் சென்றார். திருத்தணி அருகே, சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஓட்டலில் சுமார் 45 நிமிடங்கள் ஓய்வெடுத்துவிட்டு திருமலைக்கு புறப்பட்டுச் சென்றார்.

தனியார் ஓட்டலில் கவர்னர் சிறிது நேரம் ஓய்வெடுத்தநிலையில், திருத்தணி நகரிலிருந்து தேசிய நெடுஞ்சாலைக்குச் செல்லும் அனைத்து வாகனங்களையும் பைபாஸ் சாலையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். மதியம் 1.30 முதல் 2.15 வரை போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டதால், திருத்தணி நுழைவாயில் பகுதியிலிருந்து பைபாஸ் சாலையில் நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

மதிய நேரத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால், பயணிகள், வாகன ஓட்டிகள், தொழிற்சாலைகளில் வேலைக்குச் செல்வோர் என அனைவரும் கடும் அவதி அடைந்தனர். மதியம் 2.15 மணிக்கு கவர்னரின் வாகனம் திருத்தணியை கடந்து சென்ற பின்னர் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுத்த கவர்னருக்காக திருத்தணியில் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

The post கவர்னர் ரவி ஓய்வெடுப்பதற்காக போக்குவரத்து சேவை நிறுத்தம்: திருத்தணியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Governor ,Tiruttani ,Tamil Nadu ,R.N. Ravi ,Tirumala ,Governor R.N. Ravi… ,Governor Ravi ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் திருப்படித் திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்