×

மலம்புழா பூங்காவில் பேரிடர் மீட்புக்குழு செயல் விளக்கம் மூலம் விழிப்புணர்வு

 

பாலக்காடு, நவ.29: பாலக்காடு அருகே மலம்புழா பூங்காவில் அமைந்துள்ள ரோப் காரில் திடீரென மின் தடை ஏற்பட்டு பழுதடைந்தால் சிக்கிக்கொண்டவர்களை எப்படி மீட்பது என பேரிடர் மீட்புக்குழுவினர் தத்ரூவமாக செயல்படுத்தி காட்டினர். இந்நிகழ்ச்சி மூலமாக ஆயிரக்கணக்கானோர் பயனடைந்தனர்.

தீ விபத்து, மழை வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இருந்து குடியிருப்பவர்களை எவ்வாறு மீட்பது, ஆற்று வெள்ளத்தில் அகப்பட்டவர்களை எவ்வாறு மீட்பது, திடீரென் சமையல் எரிவாயு பற்றி எரிந்தல் எப்படி தீயை அணைப்பது என்பவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்வில் தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்புக்குழுவினர், வருவாய்த்துறையினர், போலீசார், நீர்வள பாசனத்துறையினர், உள்ளாட்சி அமைப்பினர் பங்கேற்றனர்.

The post மலம்புழா பூங்காவில் பேரிடர் மீட்புக்குழு செயல் விளக்கம் மூலம் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Response Team ,Malampuzha Park ,Palakkad ,Malampuzha Park Disaster Response Team ,Dinakaran ,
× RELATED அதிக கன மழை எதிர்கொள்ள...