×

பொறியாளரிடம் ₹8.48 லட்சம் ஆன்லைன் மோசடி சைபர் கிரைமில் புகார்

நாமக்கல், நவ.29: நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (28), இன்ஜினீயர். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு, பகுதி நேர வேலை தொடர்பாக ஒரு லிங்க் வந்துள்ளது. அதை ஓபன் செய்த போது, அதில் பல்வேறு டாஸ்குகள் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் பணம் கட்டினால் கமிஷனுடன் கூடுதல் பணம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை நம்பி ரஞ்சித்குமார், 10 தவணையாக ₹8.55 லட்சம் செலுத்தியுள்ளார். ஆனால், அதில் ₹6780 மட்டும் ரஞ்சித்தின் வங்கி கணக்கிற்கு வந்துள்ளது. மீதமுள்ள ₹8.48 லட்சம் மோசடி செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரஞ்சித்குமார், நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பொறியாளரிடம் ₹8.48 லட்சம் ஆன்லைன் மோசடி சைபர் கிரைமில் புகார் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Ranjith Kumar ,Rasipuram, Namakkal district ,Dinakaran ,
× RELATED கரூர் நாமக்கல் பைபாஸ் சாலையோரம் நிழற்குடைகளை சீரமைக்க வேண்டும்