×

திருச்செந்தூர் கோயிலில் தெய்வானை யானைக்கு சிறப்பு பூஜை: தங்குமிடத்தை விட்டு வெளியே வந்தது

திருச்செந்தூர்: யானை தாக்கி பாகன் உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து இன்று காலை திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதன்பின்னர் புனிதநீர் தெளிக்கப்பட்டு யானை தங்குமிடத்தை விட்டு வெளியே வந்தது.

கடந்த 18ம்தேதி திருச்செந்தூர் கோயில் தெய்வானை யானை தாக்கியதில் பாகன் உதயகுமார் (46), அவரது உறவினர் சிசுபாலன் (59) ஆகியோர் உயிரிழந்தனர். மருத்துவர்களின் ஆலோசனையின்படி பாகன்கள் யானையை கண்காணித்தும், உணவளித்தும் வந்தனர். மேலும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கடந்த 24ம்தேதி திருச்செந்தூர் வந்து கோயில் யானையை பார்த்து சென்றார். அப்போது முதல்வர் சார்பில் பாகன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு, இருவரது குடும்பத்திற்கும் ரூ.15 லட்சம் நிவாரண உதவி வழங்கினார்.

இச்சம்பவத்திற்காக யானைக்கு பரிகார பூஜையாக சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆனந்த விலாச மண்டபத்தில் வைத்து இன்று காலை சிறப்பு யாக பூஜைகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து கும்பத்தில் வைக்கப்பட்ட புனித நீர் யானை தெய்வானைக்கும், அதன் தங்குமிடத்திலும் தெளிக்கப்பட்டது. இதற்காக 10 நாட்களுக்குப் பிறகு முதல் முறையாக யானையை தங்கும் இடத்திலிருந்து பாகன்கள் செந்தில்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோர் குளிப்பாட்டி, நவதானிய உணவுகள் வழங்கி வெளியே காற்றோட்டமான இடத்தில் கட்டியுள்ளனர். மேலும் யானைக்கு பச்சை நாற்று உணவாக வழங்கப்பட்டு வருகிறது.

The post திருச்செந்தூர் கோயிலில் தெய்வானை யானைக்கு சிறப்பு பூஜை: தங்குமிடத்தை விட்டு வெளியே வந்தது appeared first on Dinakaran.

Tags : Deivanai ,Tiruchendur Temple ,Tiruchendur ,Tiruchendur Subramania Swamy Temple ,Bagan ,
× RELATED திருச்செந்தூர் கோயிலில் 7...