×

பெங்கல் புயலால் தொடர் மழை; பழநி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பழநி: பழநியில் பெங்கல் புயல் காரணமாக பெய்த தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பெங்கல் புயலின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர் பெய்து வருகிறது. இதன்படி பழநி நகர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி பழநி நகரில் பெய்த மழையின் அளவு 6 மில்லி மீட்டராக பதிவாகி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. இதனால் பழநி பகுதியில் உள்ள அணைகளுக்கும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதன்படி 65 அடி உயரமுள்ள பாலாறு- பொருந்தலாறு அணை பகுதியில் பெய்த மழையின் அளவு 15 மில்லி மீட்டராக பதிவாகி உள்ளது.

அணைக்கு விநாடிக்கு 110 கனஅடி நீர் வருகிறது. 29 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 62.20 அடியாக உள்ளது. 66.47 அடி உயரமுள்ள வரதமாநதி அணை பகுதியில் பெய்த மழையின் அளவு 7 மில்லி மீட்டராக பதிவாகி உள்ளது. அணையின் நீர்மட்டம் 59.05 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 30 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து 30 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 80 அடி உயரமுள்ள குதிரையாறு அணை பகுதியில் பெய்த மழையின் அளவு 12 மில்லி மீட்டராக பதிவாகி உள்ளது. அணைக்கு விநாடிக்கு 26 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 26 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 77.01 அடியாக உள்ளது. அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டிருப்பதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post பெங்கல் புயலால் தொடர் மழை; பழநி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : BENGAL STORM ,PALANI ,Tamil Nadu ,Palani Nagar ,Dinakaran ,
× RELATED பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ பிரேமலதா வேண்டுகோள்