×

கலைஞரின் நூல்களை நாட்டுடைமையாக்கி அரசாணை: ராஜாத்தி அம்மாளிடம் அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்

சென்னை: கலைஞரின் நூல்களை நாட்டுடைமையாக்கி அவரின் துணைவியார் ராஜாத்தி அம்மாளுக்கு செய்தி, தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன் அரசாணையை வழங்கினார். கலைஞரின் நூல்கள் அனைத்தும் நூலுரிமைத்தொகையின்றி நாட்டுடைமை செய்யப்படும் என்ற முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பிற்கிணங்க, கலைஞரின் அனைத்துப் படைப்புகளையும் அறிவுப் பொதுவுடைமை செய்யும் வகையில் நாட்டுடைமையாக்கி அவரின் மரபுரிமையரான ராஜாத்தி அம்மாளுக்கு கலைஞரின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கியதற்கான அரசாணையினை இன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது:
கலைஞரின் நூல்களை நாட்டுடைமையாக்குவதற்காக, முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அந்த வகையில் அவருடைய அனுமதியோடு, அவரின் உத்தரவின் அடிப்படையில் இன்றைக்கு அந்த அரசாணையை கலைஞரின் துணைவியார் ராஜாத்தி அம்மாளிடம் அரசின் சார்பில் ஒப்படைத்தோம். ஏறத்தாழ பல்வேறு படைப்புகளை தந்தவர். இன்னும் சொல்லப்போனால், பள்ளிப்பருவத்தில் தான் எழுதத் துவங்கி “மாணவன் நேசன்” என்கின்ற பத்திரிகை கையேடை துவங்கி அதிலிருந்து முரசொலியில் உடன்பிறப்பிற்கான பல்லாயிரக்கணக்கான கடிதங்களை எழுதி இடையில் குரளோவியம், நெஞ்சுக்கு நீதி, சங்கத் தமிழ் போன்ற படைப்புகளை தந்தவர். திரையுலகிலும் முத்திரை பதித்தவர்.

அதேபோல, 5 முறை இந்த நாட்டின் முதலமைச்சராக பணியாற்றியவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக ஏறத்தாழ 70 ஆண்டு காலம் தலைவராக பணியாற்றியவர். அப்படிப்பட்ட மகத்தான தலைவருடைய நூல்கள் நாட்டுமையாக்கப்பட்டு, இதுவரை 179 படைப்பாளர்களுடைய நூல்கள் நாட்டுமையாக்கப்பட்டிருக்கிறது. அதற்கெல்லாம், அரசின் சார்பில், நிதி வழங்கப்பட்டிருந்தாலும் பாரதியாரை தவிர, இன்றைக்கும், கலைஞரின் குடும்பத்தார்கள் அதற்கு எதுவும் தொகை வேண்டாம் என்று சொல்லிவிட்டு, கட்டணம் இல்லாமல், இன்றைக்கு நிதி இல்லாமல் அந்த படைப்புகள் நாட்டுமையாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ராஜாராமன் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநர் அவ்வை அருள் ஆகியோர் உடனிருந்தனர்.

The post கலைஞரின் நூல்களை நாட்டுடைமையாக்கி அரசாணை: ராஜாத்தி அம்மாளிடம் அமைச்சர் சாமிநாதன் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Saminathan ,Rajathi Ammal ,CHENNAI ,Gaul ,Minister Saminathan ,
× RELATED அமைச்சர் சாமிநாதன் தலைமையில் சென்னை...