- எஸ்ஐ
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திருநெல்வேலி
- ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பு
- சங்கர் ஜிவல்
- சென்னை
- IGS
- பள்ளங்களில்
- மாவா
- ஆயுத படைகள்
- உதவியாளர்
- டிஜிபி
- சங்கர் ஜீவால்
- தின மலர்
சென்னை: திருநெல்வேலியில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து நீதிமன்றங்களிலும் ஆயுதப்படை உதவி ஆய்வாளர் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அனைத்து ஐஜிக்கள், டிஐஜிக்கள், போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்பிக்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை காவ்ல நிலைய எல்லைக்குட்பட்ட திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த நிதிமன்றத்திற்கு கடந்த 20ம் தேதி வழக்கு ஒன்றில் ஆஜராக வந்த மாயாண்டி(எ)பள்ள மாயாண்டி(25) வந்தார். அதற்கு முன்பாக நீதிமன்றம் எதிரே உள்ள அன்னபூர்ணா உணவகத்தில் வைத்து சிலர் அவரை தாக்க முயன்றனர். இதனால் மாயாண்டி அவர்களிடம் இருந்து தப்பித்து எதிரே இருந்த நீதிமன்ற நோக்கி ஓடிவந்தார். அப்போது நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் உய்க்காட்டான் என்பவர் அரிவாளுடன் வந்த நபரை விரட்டிபிடிக்க சென்ற போது, மாயாண்டியை அவர்கள் நீதிமன்ற நுழைவு வாயில் அருகே வெட்டி கொலை செய்தனர். அதேநேரம் சிறப்பு உதவி ஆய்வாளர் உய்க்காட்டான் கொலை செய்த நபர்களில் ஒருவனை அன்னப்பூர்ணா உணவகத்தில் வைத்து ராமகிருஷ்ணன்(25) பிடித்தார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து போலீசார் எடுத்த துரித நடவடிக்கையால் மாயாண்டியை கொலை செய்த சிவா(19), தங்கமகேஷ்(21), மனோராஜ்(27), முத்துகிருஷ்ணன்(26) ஆகியோரை கைது செய்தனர்.
இந்நிலையில் திருநெல்வேலியில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் அருகே மாயாண்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் அனைத்து ஐஜிக்கள், டிஐஜிக்கள், அனைத்து போலீஸ் கமிஷனர்கள், அனைத்து மாவட்ட எஸ்பிக்களுக்கு அவசர சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார். அதில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட எஸ்பிக்கள் மற்றும் போலீஸ் கமிஷனர்கள் அவரவர் எல்லைக்குட்பட்ட அனைத்து நீதிமன்ற வளாகங்களுக்கு வழக்கமாக பாதுகாப்புடன் கூடுதலாக பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த பாதுகாப்பு நடவடிக்கையுடன் எஸ்ஐ ஒருவர் தலைமையில் இரண்டாம் நிலை காவலர்கள் கொண்டு குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதுகாப்பு பணி மேற்கொள்ளும் எஸ்ஐ கட்டாயம் கை துப்பாக்கி எடுத்து செல்ல வேண்டும். இரண்டாம் நிலை காவலர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியை எடுத்து செல்ல ேவண்டும். சட்டத்தின் படி ஒருவர் உடல் ரீதியாக இலக்கானால் கையில் வைத்துள்ள ஆயுதங்கள் தற்பாதுகாப்புக்காவும், பாதுகாப்புக்காகவும் பயன்படுத்தப்படும். பாதுகாப்பு பணி மேற்கொள்ளும் உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீஸ் குழுவினர் சந்தேகம் இருந்தால் சோதனை செய்யவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து நீதிமன்றங்களில் பாதுகாப்பு பணி மேற்கொள்ளும் காவல் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை தங்களது பாதுகாப்பு தொடர்பான அறிக்கையை உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு டிஜிபி சங்கர் ஜிவால் தனது அறிக்கையின் மூலம் உத்தரவிட்டுள்ளார்.
The post திருநெல்வேலியில் வாலிபர் படுகொலை விவகாரத்தை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து நீதிமன்றங்களிலும் எஸ்ஐ தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: கமிஷனர்கள், மாவட்ட எஸ்பிக்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு appeared first on Dinakaran.