×

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கை

மேட்டுப்பாளையம்,நவ.28: மேட்டுப்பாளையம் காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் காரமடை, மேட்டுப்பாளையம்,சிறுமுகை,அன்னூர்,பில்லூர் டேம் உள்ளிட்ட காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் மேட்டுப்பாளையம் டிஎஸ்பியாக கடந்த 3ஆண்டாக பணிபுரிந்து வந்த பாலாஜி அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக திண்டுக்கல் மாவட்டம் கோவிந்தாபுரத்தை சேர்ந்த அதியமான்(28) நேற்று டிஎஸ்பியாக பொறுப்பேற்றார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில்: பிஇ மெக்கானிக்கல் முடித்து விட்டு, குரூப்-1 தேர்வு எழுதினேன்.

2023ல் டிஎஸ்பியாக தேர்வானேன்.வேலூர் மாவட்டத்தில் பயிற்சி பெற்ற பின்னர் முதன்முறையாக மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் பணி அமர்த்தப்பட்டு உள்ளேன்.சட்டம்-ஒழுங்கை காக்க, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். டிஎஸ்பி அதியமானுக்கு இன்ஸ்பெக்டர்கள் சின்னகாமனன்,ஞானசேகரன்,நிர்மலா,செல்வன், காவலர்கள்,சமூக அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

The post குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Mettupalayam ,Karamadai ,Sirumugai ,Annoor ,Pillur Dam ,Balaji ,DSP ,Govindapuram, ,Dindigul district ,
× RELATED மனித-வனஉயிரின மோதலை தடுக்க புதிய...