×

நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

 

ராமநாதபுரம்,நவ.27: ராமநாதபுரம் மாவட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு திட்டங்கள் திட்ட செயலாக்கம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. அதன்படி ராமநாதபுரம் நகரம் பகுதியில் அரண்மனையில் இருந்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரால் துவக்கி வைக்கப்பட்டது.

பேரணியில் நுகர்வோர் துறை சார்ந்த அரசு அலுவலர்கள், மாவட்டத்தில் உள்ள தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் தலைமை ஆசிரியர்கள் பள்ளி மாணவ,மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான பதாகைகளைக் கொண்டு பள்ளிகளில் உள்ள குடிமக்கள் நுகர்வோர் மன்றம் மூலம் மாணவ,மாணவிகளின் பேரணி நடைபெற்றது.

The post நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Consumer Protection Awareness Rally ,Ramanathapuram ,protection ,consumer safety awareness ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரம் மருத்துவ கல்லூரிக்கு கணவர் உடலை தானமாக வழங்கிய மூதாட்டி