- பெரும்பாக்கம்
- ஆணையாளர்
- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்
- பெரும்பாக்கம், எழில்நகர்
- துணை ஆணையாளர்
வேளச்சேரி: பெரும்பாக்கம், எழில்நகரில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் 20,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு குடியிருக்கும் 12 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட மாணவர்கள் இலவச கணினிபயிற்சி பெற்று வேலவாய்ப்புகள் பெறும் வகையில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடமாடும் இலவச கணினி பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் தொடக்கவிழா நேற்று நடந்தது. இதில் இலவச கணினி பயிற்சி வகுப்பை, பள்ளிக்கரணை காவல் சரக துணை ஆணையர் கார்த்திகேயன் தொடங்கி வைத்து மாணவர்களுடன் உரையாடினார். இந்த பயிற்சி வகுப்பு பேருந்தில் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 16 கணினிகள் உள்ளன. ஒரு மாணவருக்கு ஒரு நாள் மணி நேரம் என 100 மாணவர்களுக்கு கணினி பயிற்சி அளிக்கப்படும். பெரும்பாக்கத்தை தொடர்ந்து செம்மஞ்சேரி, கண்ணகி நகர், நாவலூர், படூர், கோவளம் ஆகிய இடங்களில் உள்ள நகர்ப்புற குடியிருப்புகளில் இந்த இலவச கணினி பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது என தொண்டு நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
The post பெரும்பாக்கம் பகுதியில் இலவச கணினி பயிற்சி மையம்: துணை ஆணையர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.