×

பாவை பொறியியல் கல்லூரிகளில் ஆங்கிலத்துறை சார்பில் பேச்சுப்போட்டி

ராசிபுரம், நவ.26: பாவை பொறியியல் மற்றும் பாவை காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கல்லூரிகளில், ஆங்கிலத்துறை சார்பாக பேச்சுப்போட்டி நடந்தது. பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். தாளாளர் மங்கை நடராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக, சேலம் மண்டல ப்ராங்கோபோன் அமைப்பின் கீதாஞ்சலி திலீப் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். முதலாமாண்டு மாணவி நித்தில நாயகி வரவேற்றார். பின்னர் ‘ஆங்கிலம் – உலகளாவிய பொறியியல் வாய்ப்புகளுக்கான திறவுகோல்’ என்ற தலைப்பின் அடிப்படையில் பேச்சுப்போட்டி நடைபெற்றது. அதனை தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாிசுகளும், சான்றிதழ்களும், ரொக்க தொகையும் வழங்கப்பட்டது. சூர்யகுமரன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் கல்வி நிறுவனங்களின் இயக்குநர் ராமசாமி, கல்லூரியின் முதல்வர்கள், முதன்மையர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post பாவை பொறியியல் கல்லூரிகளில் ஆங்கிலத்துறை சார்பில் பேச்சுப்போட்டி appeared first on Dinakaran.

Tags : Bavai engineering colleges ,Rasipuram ,Bavai Engineering ,Bavai College of Engineering ,Natarajan ,President ,Bavai Educational Institutions ,Mangai Natarajan ,Salem ,
× RELATED ராசிபுரத்தில் சோதனை:குட்கா பதுக்கிய கடைகளுக்கு அபராதம்