×

காஞ்சியில் கார்த்திகை மாத சுக்ரவாரத்தை முன்னிட்டு வரதராஜ பெருமாள் கோயிலில் பெருந்தேவி தாயார் உற்சவம்

காஞ்சிபுரம்: உலகப்பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில், கார்த்திகை மாத சுக்ரவாரத்தை முன்னிட்டு பெருந்தேவி தாயார் உள்புறப்பாடு உற்சவம் விமரிசையாக நேற்று நடைபெற்றது. இதையொட்டி பெருந்தேவி தாயாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. கிளி பச்சை நிற பட்டுத்தி திருவாபரணங்கள், கதம்ப பூ மலர் மாலைகள் அணிவித்து, மேளதாளங்கள் முழங்க வேத பாராயண கோஷ்டியினர் பாடியவாரு கோயில் வளாகத்தில் பக்தர்கள் புடைசூழ உலா வந்து நந்தவன மண்டகப்படியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

இதையடுத்து சன்னதிக்கு திரும்பிய பெருந்தேவி தாயாருக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தப்பட்டது. அதன்பிறகு பெருந்தேவி தாயாரின் ஊஞ்சல் சேவை நடந்தது. நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

The post காஞ்சியில் கார்த்திகை மாத சுக்ரவாரத்தை முன்னிட்டு வரதராஜ பெருமாள் கோயிலில் பெருந்தேவி தாயார் உற்சவம் appeared first on Dinakaran.

Tags : Purundevi Mother Utsavam ,Varadaraja Perumal Temple ,Kanchi ,Sukravara ,Karthikai ,Kanchipuram ,Goddess ,Perundevi ,
× RELATED கொள்ளிடம் அருகே கூத்தியம் பேட்டையில் கோயில் இடத்தில் 25 குடிசைகள் அகற்றம்