- கூத்தியம்பேட்டை
- கொள்ளிடம்
- வரதராஜ பெருமாள் கோயில்
- கூட்டியம்பேட்டை
- கூத்தியம்பேட்டை
- மயிலாதுதுரை மாவட்டம்
- கூத்தியம் பெட்டி
கொள்ளிடம், டிச.10: கொள்ளிடம் அருகே கூத்தியம்பேட்டை கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட 25 குடிசைகள் அகற்றப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கூத்தியம்பேட்டை கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோயில் அருகே கோயிலுக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை நேற்று முன்தினம் அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து திடீரென ஆக்கிரமித்து 25 கீற்று குடிசைகள் அமைத்தனர்.
குடிசை அமைந்த இடத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக் கொடியையும் கட்டி வைத்தனர். இது குறித்து தகவலறிந்த சீர்காழி தாசில்தார் அருள் ஜோதி, வருவாய் ஆய்வாளர் குணவதி, கிராம நிர்வாக அலுவலர் பாக்கியலட்சுமி, கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் நேற்று சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த 25 குடிசைகளையும் அதிரடியாக அகற்றினர். அங்கு ஆக்கிரமித்த வீட்டுமனை பட்டா இல்லாதவர்களுக்கு வேறு இடம் தேர்வு செய்து வழங்குவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
The post கொள்ளிடம் அருகே கூத்தியம் பேட்டையில் கோயில் இடத்தில் 25 குடிசைகள் அகற்றம் appeared first on Dinakaran.