×

தாராபுரம் வழியாக சென்ற திருமாவளவனுக்கு உற்சாக வரவேற்பு

 

தாராபுரம், நவ.22:திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வழியாக கோவை சென்ற திருமாவளவனுக்கு தாராபுரம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாலைகள் அணிவிக்கப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது . திண்டுக்கல் மாவட்டம் பழனியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஒருவரின் திருமண மண்டபம் திறப்பு விழா நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார். பின்னர், கோவை வந்து விமான மூலம் சென்னை செல்வதற்காக தாராபுரம் வழியாக வந்தார்.

நேற்று மதிய உணவை தாராபுரம் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் முடித்துவிட்டு புறப்பட தயாரான போது தகவல் அறிந்து வந்த திண்டுக்கல் மற்றும் தாராபுரம் பகுதியை சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திருமாவளவனை உணவக வளாகத்தின் வெளியே சந்தித்தனர். தாராபுரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட தலைவர் ஓவியர் மின்னல் தலைமையில் தொண்டர்கள் வருகை தந்து திருமாவளவனை சந்தித்து மாலை அணிவித்து வரவேற்றனர், தொடர்ந்து அவர் புறப்பட்டு சென்றார்.

The post தாராபுரம் வழியாக சென்ற திருமாவளவனுக்கு உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Thirumavalavan ,Tarapuram ,Coimbatore ,Tirupur district ,Tarapuram Liberation Tigers Party ,Liberation Tigers Party ,Palani, Dindigul district ,Dinakaran ,
× RELATED தேர்தலில் இவ்வளவு இடங்கள் வேண்டும் என...