×

ஒத்தப்பாலத்தில் கல்லூரியில் போதைத்தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

 

பாலக்காடு, நவ.22: பாலக்காடு மாவட்டம் ஒத்தப்பாலம் அரசு சார்ந்த தனியார் கல்லூரியில் போதைத்தடுப்பு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கை மாவட்ட துணை கலெக்டர் டாக்டர் எஸ்.மோகனப்ரியா தொடங்கி வைத்தார். பாலக்காடு மாவட்ட மருத்துவ அலுவலகம், அம்பலப்பாறை சாமூகிய சுகாதார மையம், லக்கிடி குடும்ப ஆரோக்கிய மையம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு சார்பில் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு ஒத்தப்பாலம் என்.எஸ்.எஸ் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

இதில், போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து குறும்படத்தை துணை கலெக்டர் மோகனப்ரியா வெளியிட்டார். மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் வித்யா சிறப்புரை வழங்கினார். கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஒத்தப்பாலம் தாலுகா தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அகமது அப்ஷல் புகையிலை ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்றார். இந்நிகழ்ச்சியில் டாக்டர் ஜிஷா, ராதாமணி, ராமகிருஷ்ணன், ரஜிதா, நாட்டு நலத்திட்ட அதிகாரி டாக்டர் ராகிகிருஷ்ணா உட்பட மாணவர்கள், பெற்றோர்கள், கல்லூரி ஊழியர்கள் பங்கேற்றனர்.

The post ஒத்தப்பாலத்தில் கல்லூரியில் போதைத்தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Tags : -drug awareness ,Othappalam ,Palakkad ,Uthadapalam Government ,Private ,College ,Palakkad district ,District Deputy Collector ,Dr. ,S. Mohanapriya ,Palakkad District Medical Office ,Ambalparai Community ,Drug Prevention Awareness Seminar ,Uthappalam College ,Dinakaran ,
× RELATED உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு போதை பொருட்கள் விழிப்புணர்வு பேரணி